Kadhal Aasai
by Yuvan Shankar Raja, Sooraj Santhosh
காதல் ஆசை யாரை விட்டதோ உன் ஒற்றை பார்வை ஓடி வந்து உயிரை தொட்டதோ காதல் தொல்லை தாங்க வில்லையே அதை தட்டி கேட்க உன்னை விட்டால் யாரும் இல்லையே யோசனை... மாறுமோ... பேசினால்... தீருமோ... உன்னில் என்னை போல காதல் நேருமோ ஒரு குழந்தையின் மகிழ்ச்சியை போலவே உன்னை விடுமுறை தினமென பார்கிறேன் என் நிலைமையின் தனிமையை நீ மாற்று என் நேரமே அன்பே நான் பிறந்தது மறந்திட தோணுதே உன் ஒரு முகம் உலகமாய் காணுதே உன் ஒரு துளி மழையினில் தீராதோ என் தாகமே காதல் ஆசை யாரை விட்டதோ உன் ஒற்றை பார்வை ஓடி வந்து உயிரை தொட்டதோ காதல் தொல்லை தாங்க வில்லையே அதை தட்டி கேட்க உன்னை விட்டால் யாரும் இல்லையே பகல் இரவு பொழிகின்ற பனி துளிகள் நீ தானே வயதினை நனைக்கிறாய் உயிரினில் இனிக்கிறாய் நினைவுகளில் மொய்க்காதே நிமிட முள்ளில் தைக்காதே அலையென குதிக்கிறேன் உலைஎன கொதிக்கிறேன் வீடு தாண்டி வருவேன் கூப்பிடும் நேரத்தில் உன்னால் விக்கல் வருதே ஏழு நாள் வாரத்தில் ஏழு நாள் வாரத்தில் ஒரு பார்வை பாரு கண்ணின் ஓரத்தில் ஒரு குழந்தையின் மகிழ்ச்சியை போலவே உன்னை விடுமுறை தினமென பார்கிறேன் என் நிலைமையின் தனிமையை நீ மாற்று என் நேரமே அன்பே நான் பிறந்தது மறந்திட தோணுதே உன் ஒரு முகம் உலகமாய் காணுதே உன் ஒரு துளி மழையினில் தீராதோ என் தாகமே விழிகளிலே உன் தேடல் செவிகளிலே உன் பாடல் இரண்டுக்கும் நடுவிலே இதயத்தின் உரையாடல் காதலுக்கு விலையில்லை எதை கொடுத்து நான் வாங்க உள்ளங்கையில் அள்ளி தர என்னை விட ஏதுமில்லை யாரை கேட்டு வருமோ காதலின் நியாபகம் என்னை பார்த்த பிறகும் ஏன் இந்த தாமதம் ஏன் இந்த தாமதம் நீ எப்போ சொல்வாய் காதல் சம்மதம் ஒரு குழந்தையின் மகிழ்ச்சியை போலவே உன்னை விடுமுறை தினமென பார்கிறேன் என் நிலைமையின் தனிமையை நீ மாற்று என் நேரமே அன்பே நான் பிறந்தது மறந்திட தோணுதே உன் ஒரு முகம் உலகமாய் காணுதே உன் ஒரு துளி மழையினில் தீராதோ என் தாகமே...
Share these lyrics
1
Bavagari Choope
04:08
View Lyrics
2
Thillu Mullu
03:51
View Lyrics
3
Gangster
04:07
View Lyrics
4
Oru Kannil Vegam
04:52
View Lyrics
5
Adadada Arrambame
03:47
View Lyrics
6
Yedho Mayakkam
04:22
View Lyrics
7
Azhago Azhagu
04:50
View Lyrics
8
Billa 2 Theme Music
01:55
View Lyrics
9
Poikkaal Kuthirai
05:47
View Lyrics
10
Therikkudhu Masss
04:43
View Lyrics